புதுச்சேரியின் பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மாநிலத்திலும் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று குறைந்த காரணத்தினால், தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பள்ளி கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் கல்வித்துறை, சுகாதார துறை செயலாளர்கள், இயக்குனர்கள், அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அவசரப்பட்டு பள்ளிகளை திறக்க வேண்டாம். இந்த மாதத்திலேயே கொரோனா 3-ம் அலை வருமென சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதனால் பள்ளி கல்லூரிகள் திறப்பது என்பது கேள்விக்குறியாகவே இன்னும் இருந்து வருகின்றது.