மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெருவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில் விவசாயிகள் போராட்டங்களை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அப்போது நமது விவசாயிகளின் வேதனையை நேரடியாக அறிந்தவன் நான். அதனால்தான் விவசாயிகளுக்காக பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தினேன். நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்க பாடுபட்டு வருகிறேன்.
3 வேளாண் சட்டங்கள் நாட்டின் சிறு குறு விவசாயிகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இதனால் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்து இருப்பதாகவும், வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.