தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நாமக்கல், திருச்சி, கோவை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம்கள் கிடையாது என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தடுப்பூசி டோஸ் இல்லாததால் முகாம்கள் கிடையாது. தடுப்பூசிகள் வந்தவுடன் மீண்டும் முகாம்கள் குறித்து மறு அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.