Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு” பேரவையில் ஆளுநர் உரை …!!

இன்று கூடிய தமிழக சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பல்வேறு அம்சங்களை பேசி வருகின்றார்.

தமிழக  15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்றி வருகின்றார். அப்போது அவர் பேசுகையில் , காவிரி – தெற்கு வெள்ளாறு இணைப்பு திட்டம் இந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.563.50 கோடி மதிப்பீட்டில் திட்டம் .நடப்பாண்டு இதுவரை ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.7,096 கோடி பெறப்பட்டுள்ளது. மேலும் 5 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

காவேரி – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை அரசு நிறைவேற்றும்.தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக பொதுவிநியோக திட்டத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு உறுதிபடுத்தப்படும் என்று பேரவையில் ஆளுநர் தெரிவித்தார்.

Categories

Tech |