நாடு முழுவதும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் பல நாடுகளில் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் குறிப்பிட்ட வயதினருக்கும் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இணை நோயில்லாத 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு ஊசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புவோர் உடனடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.