மாநில அரசுகளுக்கு இரண்டு தவணை வரி பகிர்ந்தழிப்புகளை மத்திய அரசு விடுவித்துள்ளது.
மாதம் சுமார் இந்த மாதம் 58,332.86 கோடி ரூபாய் விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் இரண்டு தவணைகளை சேர்த்து சுமார் 1,16,665 கோடி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வரி பகிர்வாக வெளியிட்டு இருக்கின்றார்கள். இது ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி, அதாவது இன்றைய தினத்தினுடைய கணக்காக இது வெளியிடப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு மாநிலங்களுக்குமாக எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது ? உள்ளிட்ட விவரங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்திற்கு 20 ஆயிரத்து 928 கோடி ரூபாய் என்பது ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை 4,758 கோடி ரூபாய் என்பதாக இந்த வரி பகிர்வில் தமிழகத்திற்கு விடுவிக்கப்பட்டிருக்கிறது.
இது இரண்டு தவணைகளையும் சேர்த்து என்பதாக புரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இதே போல ஆந்திர பிரதேசம், அருணாச்சல், அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா என பல்வேறு மாநிலங்களுக்கும் இந்த வரி பகிர்வு என்பது கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இரண்டு தவணைகளுக்குமான வரிப் பகிர்வாக இது இருக்கின்றது. மத்திய அரசின் தொகுப்பில் இருந்து அவர்களுக்கு கிடைக்க கூடிய வரியிலிருந்து மாநில அரசுகளுக்கான தேவைகள், அவர்களுக்கு என்னென்ன மாதிரியான விஷயங்களுக்காக செலவிடப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கலந்தாலோசித்து, நிதி கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த வரி பகிர்வு என்பது அவர்களுக்கானதாக கொடுக்கப்பட்டிருக்கின்றது.