5 IPS அதிகாரிகளுக்கு DGPயாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்மையில் தமிழக அரசு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த 5 அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்ததையடுத்து 5 அதிகாரிகளுக்கும் பணியிடங்களை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில் ஐபிஎஸ் அதிகாரி ஆபாஷ் குமார் பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாகவும் , சுனில்குமார் சிங் சிறைத்துறை டிஜிபியாகவும் , சுனில் குமார் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய டிஜிபியாகவும் , சேஷசாயி சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதே போல ஐஜியாக இருந்த டேவிட்சன் ஆசிர்வாதத்திற்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.