சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரத்தில் 5 காவலர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் தந்தை – மகன் காவல் நிலையத்தில் வைத்து அடித்து சித்ரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இதில் சிபிசஐ அதிகாரிகள் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டோர் குடும்பத்தில் விசாரணை நடத்திய நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று என சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்திருந்தார்கள்.இதற்காக இன்று காலை 11 மணிக்கு 5 போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டு இருந்தார்கள்.
இந்த நிலையில் சிபிஐ தரப்பு டிஎஸ்பி விஜயகுமார் சுக்லாவிடம், எதற்காக இவர்களிடம் 5 நாட்கள் விசாரிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளீர்கள் ? என நீதிபதி ஹேமந்த்குமார் கேட்டு இருந்தார். அப்போது… இந்த வழக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு எனவும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தியதாகவும், குற்றம்சாட்டப்பட்டு 5 பேரும் வழக்கின் முக்கியமான நபர்களாக இருக்கிறார்கள்.
இவர்களிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே எங்களுக்கு இந்த வழக்கின் முக்கிய மான அந்த உண்மைகள் தெரியவரும் என்று கூறியிருந்தார்கள். அதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் சார்பு ஆய்வாளர் ரகு கனேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜா, முருகன் ஆகிய 5 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.