தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனிடையே தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி வருவதால் இன்னும் சற்று நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை ருத்ர தாண்டவம் ஆடப்போகிறது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கோவை மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும். எனவே பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.