Categories
மாநில செய்திகள்

Breaking: 5 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படுமா?… திடீர் பரபரப்பு…!!!

தமிழகத்தில் 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக கோரிக்கை மனு அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர்.

அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. அதுமட்டுமன்றி தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கொளத்தூர், சேப்பாக்கம், காட்பாடி, திருச்சி மேற்கு மற்றும் திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக்கோரி தேர்தல் ஆணைய சத்யபிரதா சாகுவிடம் மதிமுக கோரிக்கை மனு அளித்துள்ளது. வாக்காளர்களுக்கு திமுக பணப்பட்டுவாடா செய்வதாக கூறி,இந்த ஐந்து தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |