Categories
மாநில செய்திகள்

BREAKING: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரபிக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில், தெற்கு கர்நாடகா  கேரள கடலோர பகுதிக்கு அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும்.

இதனை தவிர வங்கக்கடலில் ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என்றும் நாளை தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழகம் கடலோரப் பகுதியை நெருங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள்  உருவாகி இருப்பதால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் நாளை அதீத கன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |