Categories
தேசிய செய்திகள்

BREAKING: 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா…. மத்திய அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதற்கு மத்தியில் அனைத்து விதமான பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. அதில் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்து மத்திய அரசு கடந்த வாரம் அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உத்திரவாதம் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தொழில் துறையினருக்கு அவசர கால கடன் உதவியாக ரூ.1.5 லட்சம் கோடி அளிக்க முடிவு. வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் மருத்துவ உட்கட்டமைப்பை வலுப்படுத்த 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மேலும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க சுற்றுலா ஏஜென்சிகளுக்கு 10 லட்சமும், சுற்றுலா கைடுகளுக்கு ஒரு லட்சம் கடனாக வழங்கப்படும். சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் விதமாக 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |