5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்துசெய்யப்படுகிறது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறும் என கடந்த ஆண்டு 2019 செப்டெம்பர் 13-ஆம் தேதி பள்ளி கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் பெற்றோர்களும், மாணவர்களும் ஒரு வித அச்சத்தில் இருந்து வந்தனர். இதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்துசெய்யப்படுகிறது என்றும், பழைய தேர்வு நடைமுறையே தொடரும் எனவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
#PublicExam #TNGovt #TNEducation pic.twitter.com/C4MuS9ukas
— K.A Sengottaiyan (@KASengottaiyan) February 4, 2020