Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா…. மகிழ்ச்சி செய்தி…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பலரும் பாதிக்கப்பட்டனர். இதனை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக தற்போது பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த இந்தியாவில் பத்தாயிரத்திற்கும் கட்டுப்படுத்தப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு, இந்த மாதத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரிக்க தொடங்கியது. ஆனால் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

அந்தவகையில் இந்தியாவில் நீண்ட நாட்கள் கழித்து கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று புதிதாக 46,148  பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 3,02,79,331 ஆகவும், 58,578 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,93,09,607 ஆகவும், 979 பேர் இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,96,730 ஆகவும் அதிகரித்துள்ளது.

Categories

Tech |