தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 1,079ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 1 ½, குழந்தை ,17 வயது சிறுவன் உள்பட 54 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 1,443 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 45,537ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.35% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேர் கொரோனோவால் பாதிகப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 82,275ஆக உயர்ந்த்துள்ளது. தமிழகத்தில் 3,761பேரும், வெளிமாநிலங்களில் இருந்த வந்த 179 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 53,762ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 47 அரசு மற்றும் 43 தனியார் மையங்கள் என மொத்தம் 88 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 31,505 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 32,948 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனோவால் பாதித்தவர்களில் 2,399 பேர் ஆண்கள், 1,541 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 12 வயதுக்குட்பட்ட 4,072 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 68,509 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 9,754 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளனர்.