கர்நாடகாவை சேர்ந்த 6 பாஜக அமைச்சர்கள் தங்களைப் பற்றிய வீடியோக்கள் எதையும் மீடியாக்கள் வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கர்நாடகாவில் ரமேஷ் ஜார்கிஹோலி என்ற அமைச்சரின் படுக்கையறை ஆபாச வீடியோ ஒன்று வெளியானது. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அது பொய்யான வீடியோ என்று அமைச்சர் விளக்கமளித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் ஆறு பாஜக அமைச்சர்கள் தங்களைப் பற்றிய வீடியோக்கள் எதையும் மீடியாக்கள் வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோரி சிவராம், ஹெபார், பிசி பட்டில், ஹெச்.டி. சோம் சேகர், கே.சுதாகர், நாராயணன் கவுடா, பியாரதி பசவராஜ் ஆகிய 6 அமைச்சர்களும் நீதிமன்றத்தில் அவசர வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.