Categories
தேசிய செய்திகள்

Breaking: 6 நாட்கள் இயங்காது…. ஜூன் 7 முதல் அரசு அறிவிப்பு…..!!!!

வருமானவரித் துறையின் புதிய இ-பதிவு தளம் தொடங்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதில் ஜூன் 1 முதல் 6 வரை இ-பதிவு சேவைகள் கிடையாது. புதிய இ-பதிவு தளமான incometax.gov.in என்ற இணையதள பக்கத்தில் ஜூன் 7-ஆம் தேதி முதல் வருமானவரி சேவைகள் தொடங்க உள்ளன. மேலும் அனைத்து செயல்பாடுகளும் கைபேசி செயலிலும் கிடைக்கும் விதத்தில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் வரி செலுத்துவோருக்கு உதவும் விதத்தில் அவர்களது தோல்விகளுக்கான உடனடி பதில்கள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான விடைகள், விளக்கங்கள், காணொளிகள் மற்றும் நேரடி பதில்கள் அளிக்கும் முறையை வழங்குவதற்காக புதிய அழைப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |