கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது, 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்க உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ கல்வி இயக்குனரகம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பாக அடுத்த 6 மாதங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக முகக்கவசம், பிபிஇ கிட்டுகளையும் (BBE) போதுமான அளவிற்கு இருப்பு வைத்துக் கொள்ளவும், அனைத்தையும் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் இந்தியாவில் தொடர்ந்து கண்காணிக்க கூடிய பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை விமான நிலையங்கள், வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய பயணிகள் பரிசோதனை செய்யக்கூடிய பணி என்பது நடைபெற்று வருகிறது.. பொது இடங்களில் மக்கள் கூடும்போது முக கவசம் அணிய வேண்டும்.
அதேபோல தேவையற்ற கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என்பது போன்ற இந்த சூழ்நிலையில் மருத்துவ கல்வி இயக்குனரகம் சார்பில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைகளுக்கு முக்கியமான சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் அடுத்த 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா தொடர்பான மருத்துவ கருவிகள் N 95 முகக்கவசம், பிபிஇ கிட், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் என்னென்ன தேவையோ அவற்றையெல்லாம் வாங்கி தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.. மருத்துவமனை கொரோனா வார்டுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
வெண்டிலேட்டர்கள், சிபிஏபி கருவி, ஆக்சிஜன் செலுத்தும் கருவி உள்ளிட்டவை தயாராக இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். தேவைக்கேற்ப திரவநிலை ஆக்சிஜன் தயார் நிலையில் உள்ளதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆக்சிஜனை பிரித்து அளிக்கக்கூடிய கருவிகள் சரியாக செயல்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். எதிர்பாராமல் ஏதேனும் பரவல் அதிகரித்தாலோ, அசம்பாவிதங்கள் ஏற்பட்டாலோ உடனடியாக அதனை எதிர்கொள்வதற்கு தேவையான நிலையில், மருத்துவமனையில் இருப்பு இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவமனை முதல்வர்கள் தங்களிடம் இருப்பு இருக்க கூடிய பொருட்கள் எவ்வளவு இருக்கிறது மேற்கொண்டு தங்களிடம் இருக்கக்கூடிய அந்த மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான உபகரணங்களை தலைமையிடம் உடனடியாக எழுதி கொடுத்து தேவையான உபகரணங்களையும் எல்லாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.