தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் BSNL பொதுத்துறை நிறுவனத்துக்கு 4 G சேவை வழங்க அனுமதி வழங்கப்பட்டதை போல தமிழக சுகாதாரத்துறை_க்கு மத்திய அரசு சார்பில் ஒரு அறிக்கை அனுப்பப்பட்டது. அதில் தமிழகத்தில் 350 கோடி செலவில் புதிய மருத்துவ கல்லூரிகள் திருப்பூர் , நீலகிரி, ராமநாதபுரம் , நாமக்கல் , திண்டுக்கல் , விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தொடங்குவதற்கான ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஒவ்வொரு மருத்துவ கல்லூரியும் ரூ 325 கோடி ரூபாய் மதிப்பிலான அமைக்கப்படும் என்றும் , இதில் மத்திய அரசு 195 கோடியும் , மாநில அரசு 130 கோடியும் ஒதுக்கீடு செய்யும் என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையானது தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசின் இந்த அதிரடி அனுமதி தமிழகத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் தமிழகத்திற்கு கூடுதலாக 900 மருத்துவ சீட்_டுகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.