இலங்கை குண்டு வெடிப்பில் ஈடுபட்ட 6 பயங்கரவாதிகள் தமிழகத்துக்குள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஏப்ரல் 21_ஆம் தேதி நடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் நடந்த கொடூர தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 258 பேரின் உயிரை பறித்த இந்த கொடூர நிகழ்வில் 500_க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதை நிகழ்த்தியது தாங்கள் தான் என்று IS பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த குண்டு வெடிப்பு குறித்து பலரை கைது செய்ய இலங்கை அரசு அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றது.
இந்நிலையில் இந்த கொடூர குண்டுவெடிப்பை நிகழ்த்திய பயங்கரவாதிகள் 6 பேர் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாக தமிழக டிஜிபிக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், விநாயகர் சதுர்த்திக்கு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் வேளாங்கண்ணி கோவில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தின் அனைத்து நுழைவு வாயில்களிலும் பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டுமென்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பகத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதையடுத்து கோவை மற்றும் சென்னையில் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய அரசின் எச்சரிக்கையை அடுத்து தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரித்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது