Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

BREAKING: 60 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!

நாகை மாவட்டத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டு 60 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்கும் விடுதியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகள் தாக்கியுள்ளனர்.

இந்நிலையில்  பள்ளி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 60 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் மாணவிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விடுதியில் காலை சாப்பிட்ட கோதுமை உப்புமாவில் துண்டு துண்டாக பல்லி இருந்ததாக மாணவிகள் புகார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |