Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking:சென்னையில் இன்று புதிதாக 630 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி என தகவல்!!

சென்னையில் இன்று மேலும் 630 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் கடந்த 2 மாதங்களில் அதிகபட்சமாக ஒரே நாளில் முதன்முறையாக பாதிப்பு எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் பல்வேறு ஊரடங்கு தளர்வுகளுடன் 4ம் கட்டமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் 60வது நாளாக அமலில் உள்ள ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 15,000-த்தை நெருங்கி வருகிறது. மேலும் நேற்று வரை சென்னையில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 10,000-த்தை தாண்டியுள்ளது. குறிப்பாக ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 1,000த்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

அதிகபட்சமாகி ராயபுரத்தில் 1,768 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் குடியிருப்பு பகுதிகள் அதிகமாக இருப்பதன் காரணமாக கொரோனா பரவல் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று புதிதாக 630 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |