ஆப்ரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகளின் உயிரிழப்புக்கு இந்திய நிறுவனத்தின் இருமல் மருந்து காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கிட்னி தொடர்பான பிரச்சனைகளும் இந்த மருந்தால் ஏற்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணையை WHO தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக சிறார்களின் உயிரிழப்பு அதிகரித்திருப்பதாக காம்பியா அறிவித்திருந்தது. இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
Categories