Categories
கல்வி மாநில செய்திகள்

#BREAKING: 6,7,8-9 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!!

தமிழகத்தில் கடந்த வருட இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெரும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியிருந்தனர். அதன்படி பொதுத்தேர்வுக்கான வேலைகளும் மும்முரமாக நடந்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் 10, 11, 12,-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5-ம் தொடங்கி மே 28-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு. அதன்பின் +1 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 9-ஆம் தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 முதல் மே 30 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக பிளஸ்-2 தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதி வெளியாகும். ஜூன் 17-ல் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், ஜூன் 7-ல் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடந்து 6-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 05/05/2022 முதல் 13/05/2022 வரை தேர்வு நடைபெறும். 9ஆம் வகுப்புக்கு செய்முறை தேர்வு 02/05/2022 முதல் 04/05/2022 வரை நடைபெறும். இதற்கான முடிவுகள் 30/05/2022 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 13/05/2022-க்கு முன்பாக தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |