நாளை நடைபெற உள்ள 6, 7, 8ஆம் வகுப்பு காலாண்டு அறிவியல் வினாத்தாள் வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளைய நடைபெறக் கூடிய தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி இருக்கிறது. 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கான அறிவியல் தேர்வு என்பது நாளைய தினம் இருக்கின்றது. ஏற்கனவே காலாண்டு தேர்வு உள்ளிட்டவை எல்லாம் தொடர்ச்சியாக நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையிலே நாளைய தினம் நடைபெற இருப்பதற்கான வினாத்தாள் என்பது முன்கூட்டியே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர் எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தின் உடைய முதன்மை கல்வி அலுவலர் சொல்லும் போது, இந்த தகவல் என்பது ஏற்கனவே கிடைக்கப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட பள்ளியின் உடைய தலைமையாசிரியர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, இது உண்மையான தகவல் தானா ? என்பது குறித்து விசாரணையானது நடைபெற்று வருகிறது.
ஒருவேளை இது உண்மை என்று தெரிய வந்தால் அந்த தலைமையாசிரியர் நிச்சயமாக சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்று முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்து இருக்கின்றார். நாளைய தினம் நடைபெற இருக்கும் 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு அறிவியல் தேர்வு வினாத்தாள் ஆர்எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.