இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் டெல்லியில் ஏழு நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லியில் 7 நாட்கள் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணி முதல் ஒரு வாரம் முழுக்க ஊரடங்கு அமலில் இருக்கும். மக்கள் தேவையில்லாமல் வீட்டுக்கு வெளியே வரவேண்டாம். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.