Categories
மாநில செய்திகள்

Breaking: 7 மாவட்டங்களுக்கான எச்சரிக்கை…. இன்னும் ஓரிரு மணிநேரத்தில்…. அலர்ட்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது காரணத்தால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |