அந்தமானில் இன்று காலையிலிருந்து அடுத்தடுத்து ஐந்து முறை நலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி காலை 11 மணி, மதியம் 1:55, 2:06, 2:37, 3:02, 3:25உட்பட கடந்த 24 மணி நேரத்தில் ஏழு முறை தான் நடுக்கம் ஏற்பட்டது.ட்விட்டர் அளவுகோலில் ஒவ்வொரு முறையும் சராசரியாக 4.5 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.நடுக்கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்பட அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஜம்மு- காஷ்மீரிலும் நண்பகல் 12 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
Categories