Categories
தேசிய செய்திகள்

BREAKING: 7 வயது குழந்தைக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி…. வெளியான தகவல்….!!!

மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியை சேர்ந்த 7 வயது குழந்தைக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவிலிருந்து உருமாறிய ஒமைக்ரான் தொற்று பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் நுழைந்த இந்த ஒமைக்ரான் தொற்று பல மாநிலங்களில் தற்போது பரவி வருகின்றது. இந்தியாவில் இதுவரை 44 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் பகுதியை சேர்ந்த ஏழு வயது குழந்தைக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த குழந்தைக்கு தொற்று எப்படி ஏற்பட்டது? அந்த குழந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் ? என்பதை குறித்து சுகாதாரத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இதனால் இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |