அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வு கட்டணம் ஆகிய அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும், இதன் மூலம் 11,000 ஏழை மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Categories