Categories
அரசியல்

#BREAKING : ”7 பேரை விடுவிக்க முடியாது” முதல்வரிடம் ஆளுநர் விளக்கம் …!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து  தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் ஆளுநர் இன்று வரையில் எந்த முடிவும் எடுக்காமல் மெளனம் காத்து வருகிறார். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்களும், குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது .மேலும் பேரறிவாளன் உள்பட 7 பேரை முன்கூட்டியே விடுவிக்க அனுமதிக்கோரி ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரைத்தது குறித்து, அரசுக்கு எழுத்துப்பூர்வமாக ஆளுநர் இதுவரை பதிலளிக்காத நிலையில் தனது முடிவை முதல்வர் பழனிசாமியிடம் கூறிவிட்டதாகவும் தகவல் சொல்லப்படுகின்றது.

Categories

Tech |