Categories
தேசிய செய்திகள்

BREAKING: 7 நாட்களுக்குள் whatsup – அரசு கடும் உத்தரவு…!!

வாட்ஸ் அப்பின் புதிய தனி நபர் உரிமை கொள்கை இந்திய சட்டத்தை மீறுவதாக உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப் செயலியில் புதிதாக தனியுரிமை கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளது. புதிய கொள்கைகள் அறிமுகம் செய்ததில் இருந்து அதை சுற்றி சர்ச்சைகள் எழுந்து வந்தது. இதையடுத்து இந்த விதிகள் மே 15ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த பிரைவசி பாலிஸி மற்றும் விதிமுறைகள் மே 15-ல் இருந்து அமலுக்கு வரும் எனவும்,  ஏற்றுக்கொள்ளாதவர்கள் கணக்கு நீக்கப்படும் என்று செய்திகள் பரவி வந்தது. இதற்கு பல எதிர்ப்புகள் வந்ததால் மே 15க்கு பிறகு புதிய கொள்கைகளை ஏற்காதவர்கள் கணக்குகள் நீக்கப்படாது என்றும், ஆனால் பல வசதிகள் நிறுத்தப்படும் எனவும் கூறியிருந்தது.

இதுபோன்ற சூழ்நிலையில் தற்போது மத்திய அரசு வாட்ஸ்அப்பின் புதிய தனிநபர் உரிமை கொள்கை இந்திய சட்டத்தை மீறுவதாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப்பின் நேர்மையற்ற விதிமுறைகள், நிபந்தனைகள் இந்திய பயனாளர்களுக்கு எதிரானது. இது குறித்து 7 நாட்களுக்குள் வாட்ஸ்ஆப் பதில் அளிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

Categories

Tech |