ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென்ற நளினி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய நளினி கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதி இருந்தார். அதில் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் குற்றவாளிகளாக சிறையில் இருக்கின்ற 7 பேரையும் விடுவிக்க கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியதன் அடிப்படையில் எங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார்.
அதன் மீதாக தமிழக அரசு எந்த நடவடிக்கை எடுக்காததால் ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி சரவணன் , சுப்பையா ஆகியோர் அமர்வு முன்பு விசாரித்து வந்தது. இதில் ஆய்வு ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை கோர முடியாது , தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்குங்கள் என்று ஆளுநரை வலியுறுத்த முடியாது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்த நிலையில், இன்று நளினியின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.