தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் போட்டி தேர்வுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் வெளியீட்டு வருகிறது. அவ்வகையில் வருகின்ற ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. 7,382 பணியிடங்களுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமானோர். ஜூலை 24ஆம் தேதி தமிழக முழுவதும் நடைபெற உள்ள இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் OTR கணக்கு என்னை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.