Categories
மாநில செய்திகள்

BREAKING: 8 நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற வேண்டும்…  மோடிக்கு முதல்வர் கடிதம்…!!!

தமிழ்நாட்டில் 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் எட்டு மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி, வள்ளியூர்-திருச்செந்தூர் மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற வேண்டும்.

பழனி-தாராபுரம், ஆற்காடு-திண்டிவனம், மேட்டுப்பாளையம்-பவானி நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மற்றும் சுற்றுலாத் தலங்கள் வழிபாட்டு தலங்களை இணைக்கும் நெடுஞ்சாலை களில் மேம்பாட்டு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |