Categories
மாநில செய்திகள்

BREAKING: PFI அமைப்பை சேர்ந்த 8பேர் ஆஜர் – 5 நாள் போலீஸ் காவலில் எடுக்க திட்டம் ..!!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த8 பேரை காவலில் எடுக்க நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” அமைப்பைச் சேர்ந்த 8 பேரை காவல் நிலையங்களில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் NIA போலீசார் ஆஜர் படுத்தியுள்ளனர்.நாடு முழுவதும் உள்ள பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் தீவிரவாத அமைப்போடு தொடர்புள்ளதாகவும்,  மேலும் அவர்கள் மீது இருந்த பல புகாரின் அடிப்படையில்

அவர்களுக்கு சொந்தமான இடங்கள், அலுவலகத்தில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் சோதனை நடத்தி பலரையும் கைது செய்திருந்தனர். இந்த கைது நடவடிக்கை தமிழகத்திலும் அரங்கேறியது. தமிழகத்தில் மதுரை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” அமைப்பைச் சேர்ந்த எட்டு பேரை NIA போலீசார் 5 நாட்கள் காவலில் எடுக்க தற்போது சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |