தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. அதில் முதல் கட்ட வாக்குப் பதிவில் 77.43% மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 78.47% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதற்காக 9 மாவட்டங்களில் 74 ஓட்டு மையங்கள் அமைக்கப்பட்டன. இதையடுத்து 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தற்போது தொடங்கியுள்ளது.
அனைத்து வாக்கு எண்ணும் மையங்களில் உம் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் பல பாதுகாப்பு போடப்பட்டு 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகள் முழுவதிலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி 20 ஆம் தேதி நடைபெறும் என்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தேர்தல் முடிவுகளை https://tnsec.tn.nic.in என்ற இணையதள பக்கத்தில் அறிந்துகொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.