9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு இறுதி தேர்வு குறித்து சிபிஎஸ்இ விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் அடைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மாநில அளவில் பள்ளிக்கல்வித் துறையும், நாடு முழுவதும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும் கல்வி நிலைய திறப்பு, தேர்வுகள் குறித்து அடுத்தடுத்து புதிய அறிவிப்புகளை வெளியீட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது சிபிஎஸ்இ ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதில், தோல்வியடையும் 9ஆம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தப்படும். பள்ளிகளில் கணினி வழியாகவோ அல்லது நேரடியாகவோ தேர்வு நடத்திக்கொள்ளலாம். இறுதித்தேர்வின்றி ஏற்கனவே எழுதிய பள்ளி தேர்வு மார்க் அடிப்படையில் தேர்ச்சி என அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.