Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING : 9 மணி நிலவரம்…. காமராஜ் நகர் 9.66 % வாக்குப்பதிவு ….!!

புதுவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கே வாக்குப்பதிவு சற்று மந்தமாக நடைபெற்று வருகின்றது.

திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின்  விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின்  காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து கடந்த 3 வாரங்களாக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரம் செய்த நிலையில் இன்று இந்த மூன்று தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி வேட்பாளர் நாராயணன் போட்டியிடுகின்றார்.

Image result for வாக்குப்பதிவு

 

அதேபோல் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் , திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் போட்டியிடுகின்றனர். மேலும் புதுவை மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்  திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் மற்றும் அதிமுக கூட்டணி சார்பில் என்.ஆர்.காங் வேட்பாளர் புவனேஸ்வரன் போட்டியிடுகின்றனர்.

Image result for வாக்குப்பதிவு

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் ஏராளமானோர் வாக்களித்து வருகின்றனர். புதுவையில் அங்கங்கே பரவலாக மழை பெய்து வருவதால் வாக்குப்பதிவு மந்தமாகவே இருக்கின்றது பல இடங்களில் மக்களுக்கு வாக்களிக்க எதுவாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி நிலவரப்படி புதுவையில் 9.66 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.

Categories

Tech |