ஜம்முவில் உள்ள பனி பொலிவால் 900_த்திற்கும் அதிகமான தமிழக லாரி ஓட்டுனர்கள் சிக்கி தவிக்கின்றனர்.
ஜம்முவில் உள்ள ஸ்ரீநகர் பகுதியில் கடும் பனி பொலிவு நிலவி வருகின்றது. இங்கு பல்வேறு சரக்குகளை லாரிகளில் ஏற்றி சென்ற 450 தமிழக தமிழக லாரியும் , அதில் உள்ள 900 ஓட்டுநர்களும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அங்கு சிக்கியுள்ள லாரி ஓட்டுனர்கள் கூறுகையில் , கடந்த 12 நாட்களாக உணவு இல்லாமல் கடுமையான குளிரில் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம். நாங்கள் கொண்டு வந்த உணவு தீர்ந்து விட்டது. சிலருக்கு குளிர் தாங்காமல் வலிப்பு வந்து விட்டது. எனவே எங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.