கொரோனா பரவல் அதிகரித்துவருவதால், 9,10,11 ஆகிய வகுப்புகளுக்கு வரும் 22-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்படும் என தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிகளில் சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இதனால், 9,10,11 ஆகிய வகுப்புகளுக்கு மறு உத்தரவுவரும் 22-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்படும் என தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஆன்லைன் மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டபடி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. அதே நேரம் பொதுத்தேர்வை எழுதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றும் சிறப்பு வகுப்புகள் மூலம் பள்ளிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.