Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: நாடு முழுவதும் அதிரடி உத்தரவு – ஷாக் கொடுத்த மத்திய அரசு …!!

பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யுமாறு யுஜிசி நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.

கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலங்களில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கள் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து பல்கலைக் கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதா ? அல்லது வேண்டாமா என்பது சம்பந்தமான பரிந்துரை வழங்குங்கள் என்று ஒரு குழுவானது அமைக்கப்பட்டிருந்தது. ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில்  அமைக்கப் பட்டிருந்த இந்த குழு முக்கிய பரிந்துரைகளை பல்கலைக்கழக மானியக் குழுவிடம் வழங்கியது.

யுஜிசி வெளியிட்ட பட்டியலில் 21 போலி பல்கலைக்கழகங்கள் | UGC released 21 fake universities - Dinakaran

அதில், தற்போதைய சூழலில் இறுதியாண்டு தேர்வு நடத்தினால் அது மாணவர்களுக்கு சுகாதாரக்கேடு, சுகாதாரப் பிரச்சினை ஏற்படுத்தி விடும் என்று தெரிவித்திருந்தது. மாணவர்களுக்கு முந்தைய தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், அவர்களுடைய ( செயல்திறன் ) பேர்பார்மன்ஸ் – இன் அடிப்படையிலும், இறுதியாண்டு தேர்வை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளும் நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்ற ஒரு பரிந்துரையை வழங்கி இருந்தது.

இதனால் தேர்வு ரத்து செய்யப்படும் இல்லையென்றால் முந்தைய தேர்வின் மதிப்பெண் வழங்கப்படும் அல்லது மாணவர்களே விருப்பத்தை தெரிவித்து தேர்வு எழுதி கொள்ளலாம் என்ற அறிவிப்புகளை வெளியாகும் என்று மாணவர்கள் காத்திருந்த நிலையில் தற்போது மத்திய அரசு சார்பில் கிடைத்துள்ள தகவல் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

யுஜிசி வழிகாட்டுதல்படி இறுதித் தேர்வுகளை பல்கலைக்கழக கட்டாயம் நடத்த வேண்டும். இறுதித் தேர்வில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திக் கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம்  உயர் கல்வித்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநில பாடத்திட்டம், CBSE பாடத்திட்டம் படித்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால்,

கல்லுரி மாணவர்களும் பல்கலைக்கழக தேர்வை றது செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.இது தொடர்பான ஹாஷ்டக்கும் ட்விட்டரில் ட்ரெண்டாகிய நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதம் நாடுமுழுவதும் உள்ள மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |