நடிகர் சூர்யா, இயக்குனர் பாலா கூட்டணியில் நந்தா – பிதாமகன் படத்தை தொடர்ந்து தற்போது ”வணங்கான்” என்ற படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால் இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா ? என்கின்ற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.
என் மீதும் இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்ம சங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாக இருக்கிறது. எனவே ”வணங்கான்” திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒரு மனதாக முடிவு எடுத்து இருக்கின்றோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. நந்தாவில் நான் பார்த்த சூர்யா, பிதாமகன்னில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி ”வணங்கான்” படம் பணிகள் தொடரும் நன்றி என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.