அதிமுகவில் ஒற்றை தலைமையா, இரட்டை தலைமையா குறித்து பெரும் பிரச்சினை நிலவி வருகிறது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்புக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உறுதியாக அதிமுக பொதுக்குழு நடைபெறும்.
பொதுக் குழுவில் உறுதியாக ஒற்றை தலைமை தேர்வு செய்யப்படும். தமிழக மக்களுக்கு நான்கு ஆண்டுகள் நல்லாட்சி கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி ஏகமனதாக தேர்வு செய்யப்படுவார் என முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.