Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: ADMK ஆபீஸ் கலவர வழக்கு ; 1.30மணி நேர விசாரணை நிறைவு ..!!

ஜூலை மாதம் 11ஆம் தேதி ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டு தரப்பினரிடையே பெரும் மோதல் வெடித்தது. இந்த மோதலில் கற்கள், கட்டை உள்ளிட்டவற்றை கொண்டு மோதிக்கொண்ட நிலையில்,  இந்த கலவரம் தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்த நிலையில்,  இபிஎஸ் தரப்பில் இருந்து சிவி சண்முகம் அளித்த புகாரின் பேரில் ஒரு வழக்கும், அதேபோல் ஓபிஎஸ் தரப்பில் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஒரு வழக்கும் என மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்றத்தை நாடி இருந்தனர். இதனால் இந்த வழக்குகள் சிபிசிஐடிக்கு  மாற்றப்பட்டு செப்டம்பர் 7ஆம் தேதி முதல் சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடங்கி இருந்தனர். நேரடியாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய சிசிடிவி பதிவுகள், ஆவணங்கள்,  கணினியில் இருக்கக் கூடிய தரவுகள், எந்தெந்த பொருட்கள் காணாமல் போயுள்ளது என அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விரிவான பட்டியல் தயார் செய்யப்பட்டது.

இந்த சூழலில் அதிமுக அலுவலக மேலாளராக இருக்கக்கூடிய மகாலிங்கம் அவருக்கு சிபிசிஐடி  போலீசார் சம்மன் அனுப்பி, இன்றைய தினம் காலை 11 மணியளவிற்கு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டிருந்த, சூழலில் சிபிசிஐடி அலுவலகத்தில் வழக்கறிஞர் பாபு முருகவேல் என்பருடன் நேரில் ஆஜராகி இருக்கினார் மகாலிங்கம்.  சென்னை சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் அதிமுக மேலாளரிடம் 1.30நிமிடங்கள் நடந்த விசாரணை நிறைவு பெற்றது.

Categories

Tech |