Categories
மாநில செய்திகள்

BREAKING: ”பிகில் சிறப்பு காட்சி அனுமதி” தமிழக அரசுக்கு AGS கடிதம் …!!

பிகில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

நேற்று கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்திக்கும் போது தீபாவளி சிறப்பு காட்சிக்கு எந்த படத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் , தயாரிப்பு நிறுவனம் முறையான அனுமதி பெற்று அதிக கட்டணம் வசூலிக்கமாட்டோம் என்பதை உறுதியளித்தால் சிறப்பு காட்சிகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். இதோடு அதிக கட்டண வசூல் செய்வதால் தான் அரசசு பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாளை மறுநாள் நடிகர் விஜய் நடித்த பிகில் படம் வெளியாக இருப்பதால் அதற்கான டிக்கெட் விற்பனை பல தியேட்டர்களில் படத்தின் வெளியீட்டு தேதி வந்ததும் தொடங்கியது. படம் வெளியாக இன்னும் 2 நாட்களே இருப்பதால் பிகில் படத்தின் AGS நிறுவனத்தில் கல்பாத்தி அகோரம் சார்பில் பிகில் பட சிறப்பு கட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்று கடிதம் அனுப்பபட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்க பட மாட்டாது என்றும் அந்த கடிதத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு கட்சி விஷயத்தில் தமிழக அரசு இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகின்றது.

Categories

Tech |