தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சசிகலாவின் வருகையால் அமமுக மற்றும் அதிமுகவில் பெரும் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில் அமமுக தலைமையில் ஒரு கூட்டணி அமையும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக மற்றும் அதிமுக இணைப்பு குறித்து மற்றவர்களின் யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்றும், எங்களுடைய ஒரே இலக்கு திமுகவை ஆட்சிக்கு வராமல் தடுப்பது தான் என்று கூறியுள்ளார். அதனால் அதிமுகவுடன் அமமுக கூட்டணி வைக்கப் போகிறதா? என்று சந்தேகம் எழுந்துள்ளது.