அண்மையில் நடந்த அதிமுக பொது குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்றும் அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் இருந்து மனு தொடரப்பட்டது. இந்த வழக்கு முதலில் சென்னை உயர் நீதிமன்றம் பிறகு உச்ச நீதிமன்றம் என மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு விசாரணை வந்தது.
நேற்று முதல் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது ஏன் ? என்று விளக்கமளிக்குமாறு இபிஎஸ் தரப்புக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் வினவி இருந்தார். அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக இன்று வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுக்குழு விதிப்படி தான் கூட்டப்பட்டது என்று இபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
நிரந்தர அவைத் தலைவராக கட்சியின் விதிப்படி தமிழ் மகன் உசை நியமிக்கப்பட்டாரா என்று என் நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கும் இன்று இபிஎஸ் தரப்பு விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.