Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு… நாளை மாலைக்குள்… ஐகோர்ட் அதிரடி …!!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றது.

அதிமுக பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்தது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்து வழக்கில் மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கிறது. இது இரண்டு நாட்களாக நேற்று மதியம், இன்று காலை என்று இரண்டு நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு,  பொதுக்குழு உறுப்பினர் வைர முத்து தரப்பு மற்றும் எடப்பாடி பழனிசாமி மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் தரப்பிலிருந்து வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட, நீதிபதி இது தொடர்பான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கிறார். தங்கள் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்யவே வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி நாளை மாலைக்குள் ஆவணங்களை தாக்கல் செய்யும்படி இது இருதரப்புக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இதன் மூலம் அதிமுக பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது சரியா ? தவறா ? கட்சியின் விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா ? என்பது தொடர்பான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |