கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என்று அறிவித்திருந்ததுடன் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்கும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து தான் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கனது இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்திருக்கிறது. நீதிபதி துரைசாமி, சுந்தரமோகன் அடங்கிய அமர்வு இந்த விசாரணையானது தொடங்கி இருக்கிறது. ஓ பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், அருண்பாண்டியன் ஆகியோரும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயணன், சி எஸ் வைத்தியநாதன், அரிமாசுந்தரம், நர்மதா சம்பல் ஆகியோர் வாதாட உள்ளனர்.
இந்த விசாரணையானது இறுதி விசாரணையாகவே பார்க்கப்படுகிறது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சி எஸ் வைத்தியநாதன் தங்களது வாதங்களை தொடங்கி இருக்கிறார். எடப்பாடி தரப்பில் வைக்கும் வாதங்களாவது, தனி நீதிபதி யூகங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற சொல்லியிருக்கிறார். பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவுகளுக்கு எதிராக தனி நீதிபதி உத்தரவு இருப்பதாகவும்,
தனி ஒரு நபர் பயனடையும் வகையில் தனி நீதிபதி உத்தரவு உள்ளது, அதிமுகவினுடைய ஒன்றை கோடி தொண்டர்கள் பயனடையும் வகையில் அது இல்லை, 2,190 பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கோரிக்கைகளை ஏற்று அடுத்த பொதுக்குழுவை ஜூலை 11 இல் நடக்கும் என ஜூன் 23ஆம் தேதியே அறிவிக்கப்பட்டிருந்தது, 2539 பொதுக்குழு உறுப்பினர்கள் தன்னை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதை தற்போது நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதங்களாக முன்வைத்து வருகின்றார்கள்.